மழையின் சப்தம் கூரையில் விழுந்து கேட்கிறது
இருளை ஈரமாக்கி அதன் எடையைக் கூட்டுகிறது குளிர்
மழைத்துளிகளின் பலம் தாளாமல் வளைந்து கொடுக்கின்றன தளிர்கள்
முட்டைகளை பத்திரமாக்கத் தவிக்கிறது காகம்
கொய்யா மரத்தின் அணிலின் வால் நனைந்திருக்கும்
நேற்று ஈரப்பதத்தில் நட்ட மணிச்செடி மழையின் நீர் உறிஞ்சுகிறது
குருவியின் இறகொன்று தொப்பலாய் நனைந்து மாமரத்தின் தண்டில்
ஒட்டிக் கொள்ள பயந்து கிளம்புகின்றன எறும்புகள்
மழை நீரைக் குடித்த மண்குழிகள் நிறைந்து மகிழ்கின்றன
அழகிய மழை பொழியும் இந்த இரவின் அடர்ந்த ஏகாந்தத்தில்
நீ வருகிறாய் நினைவுகளில்
மழைச்சாரல் வராமல் பேருந்து சன்னல் கண்ணாடியை இறக்கிய
பயண நினைவுகளோடு
கண்ணாடியில் வழிந்துகொண்டிருந்த மழைத்தாரைகளை மறித்து
உன் மாவிலைக் கண்களில் தீட்டுகிறேன்.