வனத்தின் கனியாகி சிவந்த அவள் உதடுகளில்
சொற்கள் பிரசவமாகி விழுகையில்
மழைத்துளிகளாகின்றன
வனம் பசுமையடைகின்றது
உயிர் ஊறும் வேரில் வாசம் கிளர்ந்து
இறுகுகின்றது வனம்
அடர்த்தியுடன் புதராகி அவள் மேலும் சிரிக்கின்றாள்
வானம் சிவக்கின்றது
கருத்த மேகங்கள் மேலும் மழையைத்தர
கானாறு புறப்படுகின்றது
சருகுகள் நிறந்த கானின் மேனி இப்போது
இசைக்கருவியாகி மீட்டுகின்றது
அவளின் சொற்களை பாடல்களாய்
இப்போது காட்டில் குயில்கள் தோன்றுகின்றன
செவிகள் முளைத்த மரங்கள்
இன்னும் தழைக்கின்றன
மேகங்கள் மரங்களில் குடியேறுகின்றன
இப்போது வேரில் மாரி வர
வனம் மழையானது
1 comment:
சங்கிலி கோர்வை போல் ஒன்றோடொன்றாய் பிணைந்த காட்சிகள் .ரிஷானின் கவிதைகளையொத்த சாயலில் ...நன்றாக இருக்கிறது
Post a Comment